தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Updated May 11, 2025 10:11 AM IST

”சென்னை மெரினாவில் ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி, சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலனை, நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!”

தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!

1.சென்னை மெரினாவில் பேரணி

சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி. இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பை போற்றும் வகையில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பிரம்மாண்ட பேரணி தீவுதடலில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிறைவு. பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

2.ஐபிஎல் போட்டிகள்

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மைதானங்களில் எஞ்சி உள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலனை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.

3.திருவண்ணாமலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் முக்கிய இடங்களில் வெடிகொண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனை.  மாட வீதிகளில் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் செல்ல மூன்று நாட்கள் தடைவிதிப்பு. 

4.ஹஜ் பயண மானியம்

முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு 25,000 ரூபாய் மானியம். 5650 பேருக்கு வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கினார்.

5.நாம் தமிழர் கட்சிக்கு சின்னம்

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு. 

6.தமிழக மாணவர்களின் கற்றல் ஆய்வு

தமிழக மாணவர்களிடம் கற்றலில் இருக்கும் இடைவெளிகளை கண்டறிவது மற்றும் மாநில அளவிலான ஆய்வு அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. 

7.மதுரை ரயில் நிலையத்தில் வழிப்பறி

மதுரை ரயில் நிலையத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது. செல்போன், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் தள்ளியது போலீஸ்.

8.மதுரை கள்ளழகர் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டாள் சூடி கொடுத்த மலர்மாலை மற்றும் கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்திற்காக மூன்றடுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, பக்தர்களின் பாதுகாப்பிற்காக வைகை வீரன் புகார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கள்ளர் வேடமிட்டு, கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் தடியுடன் புறப்பட்ட கள்ளழகரை காண பக்தர்கள் குவிந்தனர்.

9.சென்னையில் போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை அபிராமபுரத்தில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 270 மாத்திரைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

10.உதகையில் நாய்கள் மற்றும் ரோஜா கண்காட்சி

உதகையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ராஜபாளையம் உள்ளிட்ட 55 ரகங்களைச் சேர்ந்த 450 நாய்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், உதகை அரசு பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் உருவங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.