டாப் 10 தமிழ் நியூஸ்: சேகர்பாபுவை சாடிய அண்ணாமலை முதல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாப் 10 தமிழ் நியூஸ்: சேகர்பாபுவை சாடிய அண்ணாமலை முதல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்வரை!

டாப் 10 தமிழ் நியூஸ்: சேகர்பாபுவை சாடிய அண்ணாமலை முதல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்வரை!

Kathiravan V HT Tamil
Published Mar 24, 2025 09:41 AM IST

மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் சுட்டுப்பிடிப்பு, அமைச்சர் சேகர்பாபுவை சாடிய அண்ணாமலை, மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி, தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டாப் 10 தமிழ் நியூஸ்: சேகர்பாபுவை சாடிய அண்ணாமலை முதல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்வரை!
டாப் 10 தமிழ் நியூஸ்: சேகர்பாபுவை சாடிய அண்ணாமலை முதல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்வரை!

1.ஆட்டோ ஓட்டுநர் சுட்டுப்பிடிப்பு 

மதுரை ஈச்சனேரியில் தனிப்படை காவலர் மலையரசன் கொலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

2.தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 

18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசியக் கட்சிகள் உடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார். 

3.சேகர்பாபுவை சாடும் அண்ணாமலை

சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றனர். சென்னையில் ரவுடி சரித்தர பதிவேட்டில் இருந்தவர்தான் அமைச்சர் சேகர்பாபு, இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால், நாடு விளங்குமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி.

4.சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி 19.1 ஓவரில் 158 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

5.ஐபிஎல் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் 

சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 25) அன்று காலை 10.15 மணிக்கு www.hennaiduperkings.com என்ற இணையத்தளத்தில் நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

6.அரசு ஊழியர்களுக்கு விஜய் ஆதரவு 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம். ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டங்களை அரசியல், ஆட்சி அதிகார கண்கொண்டு நோக்க கூடாது. அரசு பணியாளர்கள் கோரிக்கைகளுக்கு, நியாமான தீர்வு காண்பது அரசின் கடமை என தவெக தலைவர் விஜய் அறிக்கை. 

7.சசிகலா, ஓபிஎஸை சேர்க்க முடியாது

சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை. தேர்தல் நேரத்தில் எதிர்களை வீழ்த்த கூட்டணி அமைப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 

8.பாகுபலி யானையால் பதற்றம் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானை, தோட்டப்பகுதிக்குள் நுழைந்து இரும்பு கேட்-ஐ உடைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

9.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 749 கன அடியாக அதிகரிப்பு. அணையின் நீர் மட்டம் 108.25 அடியாகவும், நீர் இருப்பு 75.947 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10.கொண்ட கொள்கையில் மாறவில்லை 

தமிழ், திராவிடம், தமிழ்நாடு, தமிழர் உலகம் என்பதை நெஞ்சில் புதைத்து வைத்துக் கொண்டு இருப்பவன் நான். சொன்ன சொல்லிலும், கொண்ட கொள்கையிலும் மாறாமல் உறுதியாக நிற்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு.