Top 10 News: குத்துச் சண்டை வீரர் வெட்டிக்கொலை முதல் தமிழக அரசு போட்ட முக்கிய உத்தரவு வரை - டாப் 10 நியூஸ் இதோ!
Top 10 News 30.01.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

Top 10 News 30.01.2025: சென்னையில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக்கொலை, குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு, ஒலி மாசுவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
சென்னையில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக்கொலை
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த குத்துச் சண்டை வீரர் தனுஷ் (24) நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்பட 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in கிய இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2540 காலி இடங்களை நிரப்ப பிப்ரவரி 8 மற்றும் 23 ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி செய்யாறு அருகே சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்த விபத்து. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்கள்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். கடந்த 12ம் தேதி மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.
சென்னையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு
சென்னை, சைதாப்பேட்டையில் இருந்து அயனாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது பைக்கில் வந்த சரத்குமார் என்பவர் மோதியதால், பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது பாட்டிலால் பேருந்து கண்ணாடியை உடைத்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்து பைக்கையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
"மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்"
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வருத்தத்துடன் வெளியேறுவதாக அக்கட்சிப் பிரமுகரும் நடிகையுமான வினோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பழனியில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்
பழனி தண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்று இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் மின்இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்தி மலை கோயிலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவு
"நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்தி நகைப்புக்குரியது; அதற்கான எந்த வழியும் இப்போது இல்லை; எனக்கு நேரமும் இல்லை; நான் அரசியலுக்கு வருவது குறித்து யாரிடமும் இதுவரை பேசியதும் இல்லை." - ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவு
அதிகளவு அரிசி சாப்பிட்டதால் மாணவி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அதிகளவு அரிசி சாப்பிட்டதால் 6 ஆம் வகுப்பு மாணவி மாலதி மூச்சுத் திணறி உயிரிழந்தார். ஆதனூரில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி மாலதி மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகளவில் அரிசி சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு உத்தரவு!
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம். ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்