TOP 10 NEWS: பெண்கள் பாதுகாப்பு கிளர்ந்து எழுந்த விஜய்! குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் அறிக்கை, கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் திறப்பு, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
இன்றைய நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்!
எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும்… அரணாகவும். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2.கண்ணாடி இழைப் பாலம் இன்று திறப்பு
கன்னியாகுமரியில் கடல் நடுவே கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் 37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
3.வடபழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி
சென்னை, வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் புரளி என தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு 12.15 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல். அதிகாலை நடைதிறந்த பின்னர் சோதனை செய்ததில் புரளி என உறுதி செய்யப்பட்டது.
4. ஒரு லட்சம் வடை மாலை அலங்காரம்
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
5.வைகுண்ட ஏகாதேசி விழா தொடக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி இன்று தொடங்குகிறது. திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும் விழாவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது.
6.56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாகவும், ஏடிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக பிரிவு சிறப்பு டிஜிபியாகவும் நியமனம்.
7. மாலில் அதிமுக நூதன போராட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் போராட்டம்.
8.திமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம்!
வீரத்தின் விளைநிலமாம தூத்துக்குடி மண்ணில் 2026ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம். பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க பாடுபட்டு வரலாறு படைப்போம் என திமுக நிர்வாகிகள் உறுதியளித்தனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
9. பேரனாக இருந்தாலும் ஏற்போம் - ஆ.ராசா
சாதி ஒழிப்புக் கொள்கையை கொண்ட அம்பேத்கரையும், பெரியாரையும் தாங்கி நிற்கும் குடும்பமாக கருணாநிதி குடும்பம் உள்ளது. சாதி ஒழிப்புக்காக கழகத்தின் தலைவனாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் பேரனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சு.
10.திருச்சிக்கு ஆமைகள் கடத்தல்
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சாக்லெட் பாக்ஸில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2447 ஆமைகளை பறிமுதல் செய்து வான் நுண்ணறிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.