TOP 10 NEWS: ’பரந்தூருக்கு புறப்பட்டார் விஜய்! கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பரந்தூர் மக்களை சந்திக்க செல்லும் விஜய், விஜய்யின் வருகைக்கு காவல்துறை கட்டுப்பாடு, கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் மர்ம மரணம், தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.பரந்தூர் புறப்பட்டார் விஜய்
பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
2. 36வது தலைவராக பரந்தூர் செல்லும் விஜய்!
தவெக தலைவர் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை 36ஆவது நபராக சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார். விமான நிலையத்திற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 35 பேர் சந்தித்து உள்ளனர்.
3.காவல்துறை கட்டுப்பாடு - புஸ்ஸி ஆனந்த் பேட்டி
பாதிக்கப்பட்ட இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் தலைவர் விஜயின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பேட்டி.