TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Jan 11, 2025 10:40 AM IST

TOP 10 NEWS: ஈரோடு கிழக்கில் திமுக சார்பில் வி.சி.சந்திரக்குமார் போட்டி, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக ஆலோசனை, விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

1.திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ விசி சந்திரக்குமார் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது. 

2. திமுக வெற்றி உறுதி - வி.சி.சந்திரகுமார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளராக அறிவித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி. இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் அரசின் நலத்திட்டங்கள் திமுகவுக்கு வெற்றியை தேடி தரும் என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்து உள்ளார். 

3.ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது. 

4.அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு 

விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல் குளத்தில் நடக்கும் 3ஆம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள், பெரிய கண்ணாடி மணி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 

5.விசிகவுக்கு மாநிலக் கட்சியாக அங்கீகாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணி பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 

6.நாம் தமிழருக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்!

நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை ஒத்துக்கவும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. 

7.பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று (ஜனவரி 10) ஒரே நாளில் 1,87,330 பேர் அரசு பேருந்துகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து உள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் உடன் சேர்த்து மொத்தமாக 3,406 பேருந்துகள் இயக்கம். 

8.சீமான் மீது 70 வழக்குகள் பதிவு 

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

9.போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிட்டு உள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு. 151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.85 ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

10.திமுக அரசு மீது தமிழிசை விமர்சனம்!

மத்திய அரசு 7ஆயிரம் கோடி ரூபாய் வரி பகிர்வு அளித்த நிலையில் தாய்மார்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க நிதி இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.