TOP 10 NEWS: ’இன்று வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்! சீமான் மீது வழக்குப்பதிவு!’ டாப் 10 நியூஸ்!
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று (24-01-2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சீமான் மீது வழக்குப்பதிவு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் அருகே உருட்டுக் கட்டைகள் உடன் கூடியிருந்த சம்பவம் தொடர்பாக சீமான் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு.
2.தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 60,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2.ஆசை வார்த்தை காட்டி பணம் வாங்கியவர்கள் கைது
சேலத்தில் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி பணம் வசூலித்த விஜயா பானு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
3.டங்ஸ்டன் சுரங்கம் குறித்து அமைச்சர் பேட்டி
“தமிழ்நாட்டு மக்களும், திராவிட மாடல் அரசும் டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி தர மாட்டார்கள் என்பதால் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது” என சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
4.தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியில் ஜனவரி 24ஆம் தேதியான இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5.கட்சி பதவிகளுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை!
தவெகவில் கட்சி பதவிகளுக்கு பணம் வாங்கும் நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரித்து உள்ளார். தவெக நிர்வாகிகள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.
6.பிரிவினை குறித்து ஆளுநர் பேச்சு
சுதந்திரத்திற்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினையைத் தான் உருவாக்கினார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்.
7.ஞானசேகரன் உடன் காவலர்களுக்கு தொடர்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் உடன் தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
8.பெண்கள் பாதுகாப்பு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
9.காப்பர் திருடிய ஏசி மெக்கானிக் கைது
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளில் ஏசி இயந்திரத்தின் காப்பர் குழாயை துண்டித்து, திருடிச் சென்ற ஏசி மெக்கானிக் வினோத் (24) கைது 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சொந்த ஊரான செஞ்சிக்கு தப்பிச் சென்ற வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் பகல் நேரத்தில் ஏசி மெக்கானிக் ஆக பணியாற்றி, இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
10.காதல் திருமணத்தால் மோதல்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, வீடு புகுந்து கடத்திச் சென்ற விவகாரத்தில், பெண்ணின் தந்தை, தாய், சகோதரரர், சகோதரி உள்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. அப்பெண்ணையும் மீட்டுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
