TOP 10 NEWS: ’மீனவர்கள் கைது! வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தமிழக மீனவர்கள் கைது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு, கொடைக்கானலில் உறைபனி, பாம்பன் பாலத்தில் ஆய்வு, விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’மீனவர்கள் கைது! வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்!’ டாப் 10 நியூஸ்!
1.இலங்கை கடற்படையால் 17 மீனவர்கள் கைது
தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2.வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்!
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரட்த்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
3.கொடைக்கானலில் உறைபனி!
கொடைக்கானலில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில் இன்று முதல் அங்கு உறைபனி பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மலைகள், புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்படுகின்றன.