Top 10 TamiNadu News: பாடத்திட்டத்தை மாற்றிய டி.என்.பி.எஸ்.சி முதல் தொடர் மழை வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 Taminadu News: பாடத்திட்டத்தை மாற்றிய டி.என்.பி.எஸ்.சி முதல் தொடர் மழை வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

Top 10 TamiNadu News: பாடத்திட்டத்தை மாற்றிய டி.என்.பி.எஸ்.சி முதல் தொடர் மழை வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

Marimuthu M HT Tamil
Dec 14, 2024 09:24 AM IST

Top 10 TamiNadu News: பாடத்திட்டத்தை மாற்றிய டி.என்.பி.எஸ்.சி முதல் தொடர் மழை வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள் குறித்துப் பார்ப்போம்.

Top 10 TamiNadu News: பாடத்திட்டத்தை மாற்றிய டி.என்.பி.எஸ்.சி முதல் தொடர் மழை வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்
Top 10 TamiNadu News: பாடத்திட்டத்தை மாற்றிய டி.என்.பி.எஸ்.சி முதல் தொடர் மழை வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மக்களாட்சிக்கும் கூட்டாட்சிக்கும் விரோதமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
  • குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி மாற்றியுள்ளது. குறிப்பாக, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மொழிப்பாடத்தில் மொழிபெயர்ப்பு, எழுதும் திறன், கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் கேள்விகள் குறைக்கப்பட்டன. குரூப் 4 தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஆங்கில மொழித்தாளை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு:

  • காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்த நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேனி, விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோயில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு:

  • மழையின் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பக்தர்களுக்கு முன்கூட்டியே சதுரகிரி செல்லத் தடை விதிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
  • சென்னை அடுத்த மணலி புதுநகர் அருகே உள்ள இடையஞ்சாவடியைச் சேர்ந்த பால் வியாபாரி சுரேஷ். இவர் கொசஸ்தலை ஆறு செல்லும் பாதையில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரித்த நீரில் சிக்கிக்கொண்டார். பாதுகாப்பாக மணல் திட்டு மீது ஏறி நின்றுகொண்டு மாநகராட்சி அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் உடனடியாகச் சென்று அவரை பத்திரமாக மீட்டனர்.
  • குற்றாலத்தை ஒட்டியுள்ள சுற்றுப்பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக அருவிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெள்ளம்பாய்வதால், அருவியை ஒட்டியுள்ள கடைகளை அப்புறப்படுத்த காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
  • தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் உள்ள மூன்றாவது மைல் மேம்பாலத்தில் வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திச் சென்றனர்.
  • திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் 17ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி, காவிரியில் பத்தாயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 7ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து 38 ஆயிரத்து 706 கன அடி என அதிகரித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.