Top 10 News : சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Top 10 News : சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 22, 2025 10:14 AM IST

Top 10 News : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது. ஓசூர் மாநகராட்சி ஆட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நேற்று இரவு பதவி ஏற்றார்.

Top 10 News : சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்
Top 10 News : சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது. ஓசூர் மாநகராட்சி ஆட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நேற்று இரவு பதவி ஏற்றார். வேட்டுமனு பரிசீலையின் போது கர்நாடகாவைச் சேர்ந்த பத்மாவதி என்பவரது மனு ஏற்கப்பட்டது குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

சீமான் வீடு முற்றுகை அறிவிப்பு - காவல்துறை பாதுகாப்பு

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டை இன்று முற்றுகையிடப்போவதாக பெரியார் கூட்டமைப்பு மே 17 இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் சீமான் வீட்டிற்கு இன்று காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் பெரியார் படத்துடன் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

ரூ.60,000 கடந்த தங்கம் விலை

வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் திரும்பியதே தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 60, 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: கைது செய்யப்பட்ட ஞான சேகரனுக்கு உடல் நல குறைவு

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை குறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீர் பாட்டிலை வாயில் வைத்து விளையாடும் குட்டி யானை!

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் யானையுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த குட்டி யானை ஒன்று பீர் பாட்டிலை எடுத்து வாயில் வைத்து விளையாடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் மது பாட்டில்களை வீசி செல்லும் பொறுப்பற்ற சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது துணை வேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்வது குறித்து 2 வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இது குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையேல் நாங்கள் இதற்கு தீர்வு கான முயற்சி செய்வோம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆளுநர் ஆன்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த 2 வழக்குகளில் இன்று முக்கிய உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாது மணல் கொள்ளை: ரூ.3,272 கோடி அபராதம்

சட்ட விரோதமாக தாது மணல் எடுத்ததாக வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு ரூ.3,272 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 லட்சம் டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக ஏற்பட்ட புகாரில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், ரான்ஸ்வேல்டு உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கி இளைஞர் படுகாயம்

கோவை மாவட்டம் காரமடை அருகே யானை தாக்கியத்தில் தோண்டை மலை கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருது சகோதரர் சிலைக்கு இன்று அடிக்கல்

சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதர்களுக்கு சிலை வைக்க முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். சிவகங்கையில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் முதல்வர் காளையார் கோவிலில் ரூ.1.6 கோடி மதிப்பில் சிலை அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கவிஞர் முடியரசனுக்கு சிலை வைக்க அடிக்கல் நாட்ட உள்ளார்.

கோமியம் சர்ச்சை - ஜெயக்குமார் பதில்

மாட்டு கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், கோமியத்தை குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கலாம். அதற்காக அதை மற்றவர்களுக்கு பரப்பிட வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.