TOP 10 NEWS: ’சீமான் நேரில் ஆஜராக உத்தரவு! தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் கண்டனம்!’ டாப் 10 நியூஸ்!
சீமான் நேரில் ஆஜராக உத்தரவு, தர்மேந்திர பிராதனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம், இருமொழிக் கொள்கை வேண்டும் என ஈபிஎஸ் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜராக கோரி ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
2.பிரதானுக்கு முதலமைச்சர் கண்டனம்
திமிராக பேசினால் தமிழர்கள் தனிக்குணத்தை பார்க்க நேரிடும். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி தரப்படும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
3.இருமொழிக் கொள்கை வேண்டும்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என வேலூரில் நடந்த அதிமுக மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
4.ஆதியன் பழங்குடிகள் போராட்டம் வாபஸ்
திருவாரூரில் ஆதியன் பழங்குடி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 20 நாட்களாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளி சென்றனர். தங்களுடைய பகுதிகளில் கள ஆய்வு செய்ய 3 மானுடவியலாளர்களை அரசு நியமித்து உள்ளதாலும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திடன் பேச்சுவார்த்தையை ஏற்றும் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
5.பிரதான் கருத்தை ஏற்க முடியாது
தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல; மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து.
6.விகடன் மீது நடவடிக்கை
விகடன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.
7.மேட்டூர் அணை நீர்மட்டம் குறைப்பு
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து, விநாடிக்கு 318 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.06 அடியாகவும், நீர் இருப்பு 78.494 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
8.மயிலாடுதுறை இரட்டை கொலை-மேலும் 2பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதான தங்க துரை, மூவேந்தன் ஆகியோரின் பெற்றோர்களும் கைது. கொலையில் தொடர்பு இருப்பதால் கைது செய்யப்பட்ட முனுசாமி, மஞ்சுளா இருவரும் சிறையில் அடைப்பு.
9.தாதுமணல் கொள்ளை வழக்கில் இன்று தீர்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
10.வெப்பநிலையை எதிர்கொள்ள திட்டம்
கோடைகால வெப்பநிலையை எதிர்கொள்ள தயராகும் வகையில், மாநில அளவில் செயல்திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.
