TOP 10 NEWS: ’திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை! பாஜகவை விளாசும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை! பாஜகவை விளாசும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: ’திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை! பாஜகவை விளாசும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil
Feb 04, 2025 09:43 AM IST

TOP 10 NEWS: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை, அரசு மீது அண்ணாமலை விமர்சனம், பாஜக மீது முதலமைச்சர் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை! பாஜகவை விளாசும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்
TOP 10 NEWS: ’திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை! பாஜகவை விளாசும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்

1.237 வாக்குச்சாவடிகள் அமைப்பு 

நாளை நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தேர்தலில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

2.காலநிலை மாற்ற உச்சிமாநாடு

சென்னையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது. நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உச்சிமாநாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். 

3.ஜாதிபாகுபாட்டை தூண்டும்படி செயல்பட வேண்டாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவ சமுதாயத்திடம் ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை அறிக்கை. 

4.திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல தடை

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

5.நாதக நிர்வாகி மீது வழக்குபதிவு

சென்னை ஜாபர்கான் பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

6.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

7.உண்மையை ஏற்க மறுப்பது ஏன்?

“இந்தியாவின் வரலாறு 3,500 ஆண்டுகள் முன் வேத காலத்தில் தொடங்கியதாக நீங்கள் கூறலாம். ஆனால் இந்தியாவில் இரும்பு காலம் 5,345 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதற்கான சான்று, தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்? என திமுக எம்.பி கனிமொழி பேச்சு.

8.அரசியலை கடந்து திருப்பணி செய்கிறோம்

ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

9.டாக்டர் ராமதாஸ்க்கு அமைச்சர் பதில்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்தான் தேசிய  கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது. அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில்தான் நெல் கொள்முதல் நடைபெறுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அமைச்சர் சக்கரபாணி பதில். 

10.பனிமூட்டத்தால் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

சென்னையில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.