TOP 10 NEWS: வீட்டுக்கு வரும் பொங்கல் பரிசு டோக்கன்! உச்சம் தொட்ட தங்கம் விலை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் முதல் தங்கம் விலை உயர்வு வரை இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
2.கோவையில் LPG டேங்கர் லாரி விபத்து
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட நிலையில், 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. டேங்கரில் இருந்து தொடர்ந்து கேஸ் வெளியேறி வருவதால் பாதுபாப்பு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
3.“யாரும் பயப்படத் தேவையில்லை”
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேட்டி.
4.சென்னையில் கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் 3.5 கோடி மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட ஹைட்ரபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5.மனைவிக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை அருகே கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் போட்டி காரணமாக கணவரை கொன்ற மனைவி உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
6.முருங்கை விலை மீண்டும் உயர்வு
மழை, பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் சென்னையில் முருங்கைக்காய் விலை மீண்டும் அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்வு. சில்லரை விற்பனை கடைகளில், கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் படிப்படியாக விலை குறைந்து கடந்த 2 வாரங்களாக கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
7.மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,871 கன அடியில் இருந்து 1992 கன அடியாக அதிகரிப்பு. தொடர் நீர்வரத்துக் காரணமாக அணையின் நீர்மட்டம், அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி உள்ளது. தற்போது டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பு 10,000 கன அடியில் இருந்து 12, 000 கன அடியாக அதிகரிப்பு.
8.யானை தந்தம் பறிமுதல்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்த இருந்த 5 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை. அவர்களிடம் இருந்து 7 கிலோ எடையுள்ள 4 யானை தந்தங்கள் பறிமுதல். இந்த யானை தந்தங்கள் அனைத்தும் 20 வருடத்திற்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இறந்த கிடந்த யானைகளின் தந்தங்கள் என பிடிபட்டவர்கள் வாக்குமூலம்.
9.கொடைக்கானலில் உறைபனி பொழிவு
கொடைக்கானலில் மீண்டும் தொடங்கிய உறைபனி. 6 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை பதிவாகியதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்பட்டன.
10.தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை ஆகிறது.
டாபிக்ஸ்