TOP 10 NEWS: ’4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு' டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம், 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 12) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!
பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட 7,513 சிறப்பு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து உள்ளனர்.
2. 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.
3. நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு!
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. 1985ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட இந்த யானைக்கு தற்போது 56 வயதாகும் நிலையில், தீவிர சிகிச்சை அளித்த போதும் உயிரிழந்தது.
4.தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் ங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.
5.புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!
புதுச்சேரியில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. விதிகளை ம் ஈறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம் அறிவிப்பு.
6.புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!
சென்னையில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 48ஆவது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொள்ள உள்ளார்.
7.திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயளாலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
8.இடையூறு செய்த மாணவர்களுக்கு அபராதம்!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பைக் சாகசம் செய்த 14 மாணவர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை.
9.பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு சத்தியராஜ் பதில்!
பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அந்த நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் சத்தியராஜ் தெரிவித்து உள்ளார்.
10.பெரியார் குறித்து ஸ்டாலின் பேச்சு!
பெரியாரை விமர்சிப்பவர்களை பற்றி பேசி, அவர்களுக்கு அடையாளம் தர விரும்பவில்லை என சமத்துவப் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

டாபிக்ஸ்