TOP 10 NEWS: ’சொர்க்கவாசல் திறப்பு முதல் சீமானை சாடிய துரைமுருகன் வரை!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு, பெரியாரை சாடிய சீமானுக்கு துரைமுருகன் கண்டனம், ஈரோடு கிழக்கில் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சொர்க்கவாசல் திறப்பு
தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதேசியையொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டு உள்ளது.
2.சீமானுக்கு துரைமுருகன் கண்டனம்
பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன, அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் சொல்லாதவற்றையும் கூட அவர் சொன்னதாக அபாண்டமாக பரப்புகிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் சீமானுக்கு கண்டனம்.
3.வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜனவரி 17ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.
4.தவெக இன்று ஆலோசனை
சென்னை, பனையூரில் இன்று தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்கள் நியமனம், கட்சி உட்கட்டமைப்பு குறித்து தவெக ஆலோசனை நடத்துகிறது.
5.மா.சுப்பிரமணியனுக்கு இன்று தீர்ப்பு
2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
6.ரேஷன் கடைகள் இன்று திறப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பை விரைந்து வழங்குவதற்காக தமிழ்நாட்டில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
7.திமுக மாணவரணி இன்று போராட்டம்
பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
8.சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
9.மீனவர்கள் கைது! முதல்வர் கடிதம்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
10.தமிழக அரசு மேல்முறையீடு
அண்ணா பல்கலைக்கழக வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.
டாபிக்ஸ்