Top 10 News: ஆம்னி பேருந்து விபத்து.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது - டாப் 10 தமிழ்நாடு செய்திகள்
Top 10 News Today: தமிழ்நாடு முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தி தொகுப்பாக சுருக்கமாக காணலாம்

திருச்சி அருகே ஆம்னி பேருந்து விபத்து, ஈசிஆர் சம்பவத்தில் முக்கிய குற்றாவாளி கைது, தங்கம் விலை உயர்வு, மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இன்றைய காலை பொழுது டாப் 10 செய்தி தொகுப்பில் உள்ளன
- தனியார் ஆம்னி பேருந்து விபத்து - 12 பேர் காயம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளத்தில் பாய்ந்த தனியார் ஆம்னி பேருந்து, மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கும் நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற இந்த ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமைடந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
2. ஈசிஆர் சம்பவம் - தேட்டப்பட்ட குற்றவாளி சந்துரு கைது
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திய வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் தேடிவந்த சந்துரு என்பவரும் கைது செய்யப்பட்டார்
3. தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு. ஒரு கிராம் ரூ.7,745க்கும், ஒரு சவரன் ரூ.61,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது
4. கால்பந்து போஸ்ட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
சென்னையை அடுத்த ஆவடி அருகே கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி. கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஆத்விக் மீது எதிர்பாராத விதமாக கோல் போஸ்ட் விழுந்துள்ளது. இதில் ஆத்விக் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டான். ஆனால் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
5. வரி வசூல் அலுவலர் பணியிடை நீக்கம்
கோவை காந்திபுரத்தில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில், வரி வசூல் அலுவலர் ஜெய் கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரு அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
6. 150 கிலோ குட்கா பறிமுதல்
நாகர்கோவில் அருகே வீடு வாடகைக்கு எடுத்து குட்கா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கமலேஷ் (39) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 150 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
7. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
பனிப்பொழிவால் வரத்து குறைவு, முகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்வு. மதுரையில் ரூ.3,500க்கு நேற்று விற்பனையான ஒரு கிலோ மல்லிகை, இன்று ரூ. 7,000 ஆக உயர்ந்தது. இதேபோல் முல்லை, ரோஜா, செவ்வந்தி, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது
8. சென்னையில் லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு
கடந்த 2022 நடந்த ஆய்வில் சென்னையில் லட்சம் குழந்தைகளில் 13 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் குழந்தைகளுக்கான புற்றுநோய் பதிவேடு தொடங்கப்பட்ட நிலையில், தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
9. மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்
தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியிருக்கிறது. இந்த திட்டம் ஏப்ரல் மாதத்துக்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, சேலம், திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாக பிரித்து , காலி மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி மறுசுழற்சி செய்வதற்காக 'டாஸ்மாக்' நிறுவனம் டெண்டர் கோரியிருக்கிறது. இந்த திட்டம் டெண்டர் முடிந்து வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
10. மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 479 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.58 அடியாகவும், நீர் இருப்பு 79.23 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
