Top 10 News:கருணாநிதியின் பெயரை எதிர்க்கக் காரணம்.. மது குடிப்பவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இடமில்லை.. இரவு டாப் 10
Top 10 News:கருணாநிதியின் பெயரை எதிர்க்கக் காரணம்.. மது குடிப்பவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இடமில்லை.. இரவு டாப் 10

நவம்பர் 10ஆம் தேதிக்குண்டான இன்றைய தமிழ்நாடு முக்கிய செய்திகளின் தொகுப்பினைக் காணலாம்.
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் எனவும், படிக்க உதவிட 2021ல் மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்; கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்து, வேலைக்குச் செல்லும் வரை அவரை இன்று அழைத்து வாழ்த்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இறப்பு செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் வாசகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர் இந்திரா செளந்தர்ராஜன் என்றும், வரலாறு, நிகழ்காலத்தை இணைத்து சுவாரஸ்யமான புதினங்களை புனைவதில் வல்லவர் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.