TOP 10 NEWS: ’மயிலாடுதுறையில் NIA சோதனை முதல் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வரை’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு, வேங்கைவயல் விவகாரத்தில் அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு, தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், ஈபிஎஸ்க்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் காயம், 13 மீனவர்கள் கைது.
2.தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார், பேருந்து, லாரி ஆகிய வாகனங்களில் அடுத்தடுத்து மோதி விபத்து. 5க்கும் மேற்பட்டோர் காயம்.
3. ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்
யாருமே உள்ளே போகக் கூடாது என்கிற கெடுபிடி வேங்கைவயலில் நிலவுகிறது. இது ஜனநாயக உரிமையை பறிக்கும் நடவடிக்கையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து.
4.முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை
திருவாரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சதாசிவம் என்ற முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வித்தித்து உத்தரவு.
5.மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
6.பட்டியல் சமூக முதலமைச்சர் வேண்டும்
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக பிரித்து வைத்துள்ளனர். பட்டியல் இனத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
7.தமிழக அரசு மீது ஈபிஎஸ் விமர்சனம்
சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் பல ‘சார்’கள் பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாகவும் புகார்.
8.ஞானசேகரனுக்கு காவல் நீட்டிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
9.தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், அமைச்சுப் பணியாளர்கள் என 47 ஆயிரம் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
10.ஈபிஎஸ் மீது எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்
”சார்”களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான ஈபிஎஸ்க்கு அதிமுகவின் ‘சார்’களை நினைவிருக்கிறதா?. நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ‘அதிமுக சார்களை’ மறக்க மாட்டார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து,
