TOP 10 NEWS: ’கருவறைக்குள் நுழைய இளையராஜாவுக்கு தடை! ஈபிஎஸ்க்கு திமுக கண்டனம்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: கோயில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு, விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.இளையராஜாவுக்கு கருவறையில் நுழைய அனுமதி மறுப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இசையமைப்பாளர் இளையராஜா சென்ற போது, வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாகவும், வெளியே செல்லும் படியும் ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.
2.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகரும்.
3.விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு.
4.ஆதவ் அர்ஜூனா குறித்து திருமா கருத்து
ஆதவ் அர்ஜூனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. எவ்வளவு ஆற்றல் பெற்றவராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து.
5.ஆதவ் அர்ஜூனா மீது வன்னி அரசு விமர்சனம்
ஆதவ் அர்ஜூனா விசிகவுக்குகாக எந்த தேர்தல் வியூகமும் வகுத்து தரவில்லை. திருமாவளவன் தாமாக முன் வந்து பதவியை கொடுத்ததாக கூறுவது பொய் என விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேச்சு.
6.விக்னேஷ் சிவன் விளக்கம்
புதுச்சேரியில் அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து உள்ளார். படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது தொடர்பாகவே அமைச்சரிடம் பேசியதாகவும், இது தொடர்பாக பகிரப்படும் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள் நகைச்சுவையாக உள்ளதாக கருத்து.
7.விஜய் திவாஸ் தினம்
விஜய் திவாஸ் தினத்தையொட்டி இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை அதிகாரிகள் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 1971 இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதி விஜய் திவாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
8.பூண்டியில் நீர்த்திறப்பு குறைப்பு
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் வெளியேற்றம், 12,000 கன அடியிலிருந்து 8,500 கன அடியாக குறைப்பு.
9.ஈபிஎஸ்க்கு ரகுபதி கண்டனம்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல ‘வாழைப்பழ காமெடியை’ போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி! திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் மாண்புமிகு முதலமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி! ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ட்வீட்.
10.மகனை கொன்ற தந்தை கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், குடும்பத் தகராறில், மண்வெட்டியால் மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை பிரியாதன் கைது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகன் பால முருகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
டாபிக்ஸ்