TOP 10 NEWS: ’விஜய் பாஜகவின் B டீமா? சீமான் அந்நியனா? அம்பியா? உடைந்த ஹெச்.ராஜா! விளாசிய பிரேமலதா!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தெலுங்கு மக்கள் குறித்த பேச்சுக்கு நடிகை கஸ்தூரி விளக்கம், நடிகர் விஜய் குறித்து ஹெச்.ராஜா பேச்சு, சீமான் மீது பிரேமலதா விமர்சனம், இந்தி விவகாரம் தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சர்ச்சை பேச்சு குறித்து கஸ்தூரி விளக்கம்
தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக பொய் பரப்புரை செய்கின்றனர். தெங்கு மக்கள் மனம் புண்படும்படி நான் ஏதும் பேசவில்லை. நான் ஒரு தெலுங்கு மருமகள் என நடிகை கஸ்தூரி விளக்கம்.
2.மெட்ரோ ரயிலில் அதிக பயணிகள் பயணம்
கடந்த அக்டோபர் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 90.83 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். அதிகபட்சமாக அக்டோபர் 6ஆம் தேதி அன்று 4 லட்சத்து 42 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்.
3.தில்லை கோயிலில் மீண்டும் பிரச்னை
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். கோயிட்லில் எந்த புனரமைப்பு பணிகளையும் செய்ய 15 நாட்களுக்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்றம் உத்தரவு.
4. விஜய் பாஜகவின் பி டீமா?
மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறும் விஜய் எப்படி பாஜகவின் பி டீம் ஆவார்; சீமானை பாஜகவின் பி டீம் என்றார்கள். தற்போது விஜயை கூறுகின்றனர். ஒரு கட்சிக்கு அத்தனை பி டீம் இருந்தால் அது தாங்காது என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் ஹெச்.ராஜா பேட்டி.
5.சீமானை சீண்டிய பிரேமலதா
விஜயை ஏன் தம்பி என சொல்ல வேண்டும்; பிறகு ஏன் லாரியில் அடிபடுவார் என சொல்ல வேண்டும். சீமான், திடீரென அம்பியாகவும், திடீரென அந்நியன் ஆகவும் மாறுவார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்.
6.கூச்சல் போட வேண்டியது இல்லை
மகளிர் உதவி கட்டுப்பாட்டு மைய விளம்பரத்தில் தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியது இல்லை எனவும் கருத்து.
7. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் நீட்டிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்றக் காவலை நவ.14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை நகலை 27 பேரும் பெற மறுத்த நிலையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவு.
8.தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18&ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
9. 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
10. ராகுல் காந்திக்கு வானதி கேள்வி
வயநாட்டில் சகோதரி பிரியங்காவின் வெற்றிக்காக தனது தந்தை ராஜீவ் காந்தி கொலையை வைத்து ராகுல் காந்தி அனுதாபம் தேடுகிறார். நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி, ராஜீவ் காந்தியோடு கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி.
டாபிக்ஸ்