தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Top 10 News: Important News Including Ponmudi Appeal Case

Top 10 News: பொன்முடி மேல்முறையீடு வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2024 07:18 AM IST

Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

பொன்முடி
பொன்முடி

ட்ரெண்டிங் செய்திகள்

•அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

•வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

•சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 601 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.12) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

•திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று (ஜனவரி 12) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

•டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

•தலைநகர் டெல்லியில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சந்திக்கவுள்ளது. வெள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்

•சி ஏ ஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க சொன்னவர் எடப்பாடி பழனிச்சாமிதான். தற்போது மாற்றி பேசுவதாக முன்னால் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.

•ஊதிய உயர்வு கோரி ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 80 சதவீத ரயில்கள் ரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

•ஆஸ்திரேலியா ஓபன் காட்சி போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் உடன் கிரிக்கெட் விளையாடினார் ஜோகோவிச். கூடைப்பந்து ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளிலும் கலக்கிய ஜோகோவிச் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

WhatsApp channel

டாபிக்ஸ்