TOP 10 NEWS: திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் பலி! லாட்டரி அதிபர் வீட்டில் 12 கோடி பறிமுதல்! டாப் 10 நியூஸ்!
திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் பலி, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, சில்வர் பேப்பருக்கு தடை, கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.யானை மிதித்து 2 பேர் பலி
திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை தெய்வானை மிதித்ததில் யானை பாகன் உதயகுமார் மற்றும் சிவபாலன் உட்பட இருவர் உயிரிழப்பு.
2.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
3. சில்வர் பேப்பருக்கு தடை
உணவகங்களில் பார்சலுக்கு சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த உணவுப்பாதுகாப்புத்துறை தடைவிதிப்பு. தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து 5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.
4.மதுக்கடைகள் குறித்து உத்தரவு
குத்தகை காலம் முடிந்துவிட்டுதால் மதுபானக் கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும் என்றும் ஆணை.
5.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு.
6.வஃக்ப் வாரியம் மீது விமர்சனம்
பழமையான கோயில்களை வக்ஃப் வாரியத்திற்கு கொடுக்கமாட்டோம்; அதற்காக போராட்டம் நடத்துவோம். தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்திற்கு உட்பட்டு நிறைய கோயில்கள் உள்ளன என திருச்சியில் நடைபெற்ற நிலம் பாதுகாப்பு இயக்க நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேட்டி.
7. தவெக உடன் கூட்டணியா?
தவெக உடன் கூட்டணி வைப்பதாக எப்போது அறிவித்தோம்; கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணியை இறுதி செய்ய இன்னும் காலம் இருக்கின்றது. பொதுச்செயலாளர் முடிவை அறிவிப்பார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் அறிவிப்பு.
8. தமிழ்நாட்டுக்கு வரி பாதிப்பு
மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்கு கடந்த ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் 7.931% இருந்ததாவும், இப்போது அது 4.09 %, அதாவது பாதியாக குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
9. லாட்டரி அதிபரிடம் 12.41 கோடி பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் 12.41 கோடி பறிமுதல்; ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கம். 22 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல்.
10.தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு!
கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம். முன்னதாக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
டாபிக்ஸ்