TOP 10 NEWS: மிக கனமழை எச்சரிக்கை முதல் கஸ்தூரியை விளாசிய நீதிபதி வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: திராவிடத்தை சீண்டும் ஆளுநர், மிக கனமழை எச்சரிக்கை, வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இணைப்பு, கஸ்தூரிக்கு நீதிபதி கண்டனம், உதிரி இருந்தால் உதயசூரியனுக்கு வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.திராவிடத்தை சீண்டும் ஆளுநர்
தமிழக பல்கலைக்கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள்தான் அதிகம் உள்ளன; சுந்திர போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை என ராஜ்பவனில் நடந்த ‘பாஞ்சாலங்குறிச்சி போர்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
2.மிக கனமழை எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி.
3.வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இணைப்பு
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்து உள்ளது. ஏற்கெனவே 8 பெட்டிகள் உடன் கூடுதலாக 8 பெட்டிகளை இணைத்து இயக்க அனுமதி தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4.கஸ்தூரிக்கு நீதிபதி கண்டனம்
நட்புணர்வு உடன் பழகும் மாநிலங்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு கஸ்தூரி பேசி உள்ளார். மனுதாரரின் பேச்சு சரியானது அல்ல; இதுபோன்ற சம்பவங்களை இப்படியே விட்டால் பிறை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என நடிகை கஸ்தூரி ஜாமீன் கேட்ட வழக்கில் நீதிபதி கருத்து.
5.அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 37 ஆயிரம் கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. நிதி சவால்களுக்கு மத்தியில் மக்களுக்குத் தரமான மின்சாரத்தைக் குறைந்த விலையில் வழங்க வேண்டுமென்ற அரசின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகின்றது என டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.
6.உதிரி இருந்தால் உதயசூரியனுக்கு வாய்ப்பு
2026ஆம் ஆண்டு அனைவரும் சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருக்க கூடாது; உதிரியாக இருந்தால் உதய சூரியனுக்கு வாய்ப்பு வந்துவிடும். மாநில கட்சிகள் உடன் ஆலோசித்த பிறகு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவு செய்யும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
7.வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக மீனவர்கள் இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீனவர்களையும், படகுகளையும் விரைந்து விடுவிக்க தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
8.ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு கண்டனம்
அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ’மொட்டை’த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. ’சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்’ என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி ’கபட வேடதாரி’ என்றெல்லாம் பேசலாமா? என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி.
9.காவல்துறை சீரழிவு
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 இ.கா.ப. அதிகாரிகளின் பெயர்களை வழங்கும்படி ஆணையிட்டுள்ளது. தமிழக காவல்துறை எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தான் சான்று ஆகும் என அன்புமணி குற்றச்சாட்டு.
10.மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மீன்பிடி படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்