Top 10 News: ’தங்கச்சிமடத்தில் பேய் மழை! நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன்! பள்ளி ஆசிரியை குத்திக் கொலை!’ டாப் 10 நியூஸ்!
Top 10 News: தஞ்சாவூரில் அரசுப்பள்ளியில் ஆசிரியை கொலை, தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன், ராமநாதபுரத்தில் அதிகனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.கொலை நடந்த பள்ளிக்கு விடுமுறை
தஞ்சை அருகே ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை; மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே பள்ளி திறக்கப்படும். மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.
2.தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
ஓசூரில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. விளம்பரத்தில் மட்டும் ஆட்சிக் காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் உள்ளார். வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
3.நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன்
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
4.கிராம மக்கள் போராட்டம் வாபஸ்!
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சின்ன உடைப்பு கிராம மக்கள் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
5.கனிமவளக் கொள்ளைக்கு அபராதம்
தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு 138.4 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு. கல் மற்றும் மண் குவாரிகளில் 92.56 கோடி மதிப்பில் கனிமவளக் கொள்ளை நடந்தது விசாரணையில் அம்பலம்.
6.தங்கச்சி மடத்தில் அதிகனமழை
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை 27.2 செண்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. காலை முதல் மதியம் 1 மணி வரை 5 செ.மீ மழை பதிவான நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பதிவாகி உள்ளது.
7. 4 மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை
ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைகால் பகுதிகளில் அதிகன மழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.
8. நீதிபதி டி.கிருஷ்ணகுமாருக்கு பதவி உயர்வு
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ண குமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு. இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்து, காலியிடங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.
9. தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை
பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
10. சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு அன்புமணி கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்