TOP 10 NEWS: அதானி டெண்டர் ரத்து முதல் விஜயை சாடிய அமைச்சர் வரை! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: அதானி டெண்டர் ரத்து முதல் விஜயை சாடிய அமைச்சர் வரை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: அதானி டெண்டர் ரத்து முதல் விஜயை சாடிய அமைச்சர் வரை! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 31, 2024 09:56 AM IST

TOP 10 NEWS: அதானி குழும டெண்டரை ரத்து செய்த மின்சார வாரியம், விஜய் மீது அமைச்சர் விமர்சனம், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் உதயநிதி, சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: அதானி டெண்டர் ரத்து முதல் விஜயை சாடிய அமைச்சர் வரை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அதானி டெண்டர் ரத்து முதல் விஜயை சாடிய அமைச்சர் வரை! டாப் 10 நியூஸ்!

1.அதானி குழும டெண்டர் ரத்து

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்காக கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்து உள்ளது. அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்ததால் டெண்டர் ரத்து என தகவல்.

2.பழனி கோயிலில் காணிக்கை விவரம் வெளியானது

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 4,67,49,356 ரொக்கம், 1069 வெளிநாட்டுக் கரன்சிக்கள், 1012 கிராம் தங்கம், 17062 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கையாக உள்ளது. 

3.சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி ரத்து

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் இன்று காலை 10 மணிக்கு சீமான் தலைமையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. 

4.தனியார் மருத்துவமனையில் தீ 

மதுரை புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஏற்கெனவே இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. 

5.ஜல்லிக்கட்டை தொடங்கும் உதயநிதி 

வரும் ஜனவரி 16ஆம் தேதி அன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

6. தமிழ்நாட்டு பெண்களிடம் இவ்வளவு தங்கமா?

இந்திய பெண்களிடம் 24ஆயிரம் டன் தங்கமும், தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6 ஆயிரத்து 720 டன் தங்கமும் உள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல். 

7.திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்டும் அவர், குமரியிலுள்ள சாலைக்கு ‘அய்யன் திருவள்ளுவர் சாலை’ என பெயர் சூட்டுகிறார்.

8.விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம் 

பிற மாநிலங்களுக்கு விஜய் சென்று பெண்களின் நிலை குறித்து பார்த்துவிட்டு தமிழ்நாட்டை பற்றி பேச வேண்டும். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி. 

9.அலிகான் துக்ளக் ஜாமின் தள்ளுபடி 

போதை பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.

10.திருச்சியில் ஜன.10ல் உள்ளூர் விடுமுறை 

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.