TOP 10 NEWS: ’ஈரோடு தொகுதி காலியானதாக அறிவிப்பு! சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு, சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு, கேரளாவுக்கு அண்ணாமலை கண்டனம், ஈபிஎஸ் மீது கே.என்.நேரு விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.ஈரோடு கிழக்கு தொகுதி காலி
ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. 2025 ஜனவரி அல்லது பிப்வரவரி மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்.
2.ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதே திமுகவின்நிலைப்பாடு. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி, டி.ஆர்.பாலு கருத்து.
3.சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட்
கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தேனியில் தங்கி இருந்த போது 2.5 கிலோ கஞ்சா வைத்து இருந்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4.குப்பைகளோடு கேரளா செல்வேன்
கேரள மாநிலத்தின் குப்பை கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதை திமுக அரசு தடுக்க வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், கழிவுகள், குப்பைகளை லாரியில் சென்று கேரளாவில் கொட்டுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்.
5.அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி
கனிமவள முறைகேடு புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆனார். 2006ஆம் ஆண்டு கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது சட்டவிரோத சுரங்கங்களுக்கு அனுமதி அளித்ததாக புகார்.
6.தங்கம் விலை உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
7.தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும்
தென் மேற்கு வங்க கடலுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து உள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு படிப்படியாக மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
8.முதியவர்களுக்கான பயண டோக்கன்கள்
சென்னையில் முதியவர்களுக்கான இலவச பயண டோக்கன் டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9. மாணவர்களுக்கு ஏஐ பயிற்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ. தொழில் நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட்.
10.ஈபிஎஸ் மீது கே.என்.நேரு விமர்சனம்
’தெனாலி’யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது! பாஜகவுக்கு அச்சப்படும் கோழை பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.