Top 10 News: ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு முதல் விஜய் போட்ட அதிரடி உத்தரவு வரை - டாப் 10 நியூஸ் இதோ!
Top 10 News 05.02.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

Top 10 News: ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு முதல் விஜய் போட்ட அதிரடி உத்தரவு வரை - டாப் 10 நியூஸ் இதோ!
Top 10 News 05.02.2025: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், த.வெ.க மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இடைத்தேர்தலில் 2,27,237 பேர் வாக்களிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை சோதனை
- சென்னை, ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் உள்ள யாக்கூப் பேக் என்பவரது வீட்டில் நேற்று இரவு வருமானவரித் துறையினரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இவரது வீட்டில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரோன்கள் பறக்க தடை
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரம் முழுவதும் நாளை புதன்கிழமை 5ஆம் தேதி காலை 6:00 மணியிலிருந்து ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து திருநெல்வேலி மாநகர காவல் துறை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்
- தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 5-ல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவு
- பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடமாடும் பாஸ்போர்ட் சேவை
- பின்தங்கிய, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவையை எளிதாக வழங்கும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 2ஆவது நாளாக தடை
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல 2ஆவது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவுக்கு பிறகு திருப்பரங்குன்றம் இயல்பு நிலைக்கு திரும்பியது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி போராடிய சாம்சங் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த ஆலை நிர்வாகத்தை கண்டித்து சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
- சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுவதை ஒட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் உத்தரவு
- நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. விரைவில் நிர்வாகிகளை நியமனம் செய்து பட்டியலை அனுப்ப மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.