Top 10 News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்.. ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்.. ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட டாப் 10 நியூஸ்!

Top 10 News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்.. ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட டாப் 10 நியூஸ்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2025 10:03 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுதாக்கல் முதல் மண்டபம் சென்னை எழுப்பூர் இடையேயான சிறப்பு ரயில் வரையான இன்றைய டாப் 10 செய்திகள் குறித்து பார்க்கலாம்.

Top 10 News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்.. ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட டாப் 10 நியூஸ்!
Top 10 News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்.. ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட டாப் 10 நியூஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்டு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சீதாலட்சுமி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மரியாதை 

எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரின் திரு உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ரகுபதி, த.மோ.அன்பரசன், சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். 

ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. யுஜிசி தலைவரை சேர்த்து துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் உத்தரவு

கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளுக்கு அனுமதி

சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பன்னாட்டு அரங்கம் 5 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.525 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கின் கட்டுமான பணிகள் வரும் 2025இறுதி அல்லது வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்கத்திட்டம்.

OMR தாள் முறையில் நீட் தேர்வு

நடப்பாண்டு நீட் தேர்வு OMR தாள் முறையில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஒரே நாளில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர் கைது

சென்னை மைலாபூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து வெளியிட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்த மேலும் இருவர் கைது செய்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் அருகே சாலை விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி சாலை விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி..

திருப்பதி சென்று விட்டு திரும்பிய தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பிரேம் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர்களிடையே இருந்த முன் விரோதம் காரணமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்த பிரேமிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டபம் சென்னை இடையே சிறப்பு ரயில்

மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மண்டபத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 11.30க்கு வரும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.