TOP 10 NEWS: டெல்லி பறந்தார் துரைமுருகன்! கே.பாலகிருஷ்ணனுக்கு திமுக பதிலடி! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு டெல்லி சென்ற துரைமுருகன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு திமுக பதில், மதுரை எம்.பி. மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 05) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.கே.பாலகிருஷ்ணனுக்கு திமுக பதில்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறதா என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பிய நிலையில். ”பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா பாலகிருஷ்ணன் உள்ளார்” என முரசொலி நாளேடு விமர்சனம்.
2.டெல்லி பறந்த துரைமுருகன்
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லுரியில் நடந்த 44 மணி நேர அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்றிரவு டெல்லி விரைந்தார்.
3.ரயில் மோதி மாணவர் உயிரிழப்பு
சென்னை குரோம்பேட்டை அருகே ரயில் மோதி 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் தேஜஸ்வர் (14) உயிரிழப்பு. டியூசன் சென்ற மகனை காணவில்லை என சிறுவனின் தந்தை, தாம்பரம் ரயில் நிலையத்தில் விசாரித்தபோது தன் மகன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
4.சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரத்தில் சி.பி.எம். கட்சியில் மாநில மாநாட்டிற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
5.விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுக்கள்!
பொங்கல் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே அறிவித்த 5 சிறப்பு ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இன்று காலை 8 மணிக்கு ஆன்லைன் மற்றும் ரயில் நிலைய கவுண்டரில் முன்பதிவு தொடங்கியது.
6.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
7.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1307 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.52 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 91.130 டி.எம்.சி. ஆக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.
8.விதிமீறலை கண்காணிக்க குழு அமைப்பு
பொங்கல் விடுமுறையையொட்டி அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரிநிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது உள்ளிட்டவற்றை இந்த குழு கண்காணிக்கும் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
9.பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளர் சசிபாலன் கைது செய்யப்பட்டார்.
10.பாஜக ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சியில் பாஜகவைச் சேர்ந்த ரங்கநாயகி தலைவராக உள்ள நிலையில், ஊராட்சிக்கு 26.30 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் விசாரணை நடத்தி, இழப்புத் தொகையை 15% வட்டியுடன் ஊராட்சிக்கு திரும்ப செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்