TOP 10 NEWS: போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி! சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி! சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி! சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Published Feb 18, 2025 09:31 AM IST

TOP 10 NEWS: மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம், மதுரை, திருச்சியில் டைடல் பூங்காக்கள் திறப்பு, திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி, விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமானின் மனு தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி! சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி! சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! டாப் 10 நியூஸ்!

1.திமுக கூட்டணி ஆர்பாட்டம் 

தேசிய கல்விக் கொள்கை, மத்திய பட்ஜெட், யூஜிசி விதிமுறைகள், மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 

2.டைடல் பூங்காக்கள் இன்று திறப்பு 

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

3.திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

அரசு பள்ளிக் குழந்தைகள் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள். மும்மொழிக் கொள்கை சர்ச்சையை சுட்டி காட்டி திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி. 

4.ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையாக மாறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

5.சி.வி.சண்முகத்திற்கு சிவசங்கர் கண்டனம்

நிதானம் இல்லாமல் அதிமுகவின் சி.வி.சண்முகம் பேசுகிறார். முதல்வரை ‘அப்பா’ என பெண்கள் அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது. தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துகிறது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம். 

6.துணை முதல்வர் பதவியை ஏற்றது ஏன்? - ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி சொன்னதால் அதை செய்தேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு. 

7.மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதியில் நேற்று மாலை 7 இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம் பெற்று உள்ளன. 

8.காரைக்காலில் இன்று கடையடைப்பு 

இலங்கை கடற்படை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து 8வது நாளாக காரைககால் மீனவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைப்பு. 

9.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு. 

10.சீமானின் மனு தள்ளுபடி

தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக் கோரிய சீமானின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 2011இல் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்து இருந்தார். 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.