TOP 10 NEWS: ’தடையை மீறி தேமுதிக பேரணி! அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தடையை மீறி தேமுதிக பேரணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, விஜயகாந்திற்கு தலைவர்கள் புகழாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதொ!
1.தடையை மீறி தேமுதிக பேரணி!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.
2.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3.விஜயகாந்திற்கு கமல் புகழாரம்
அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்கு பெரும் தாக்கத்தை உருவாக்கி சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின்பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போது பசுமையாக நிலைத்திருக்கும்.
4.விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ்
“விஜயகாந்தின் வரலாறு என்றென்றும் நிலைத்திருக்கும்” விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
5.மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார்
இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்து இருந்தால் தமிழ்நாட்டில் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
6.சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நடந்த சம்பவத்தில் வேனில் சென்ற 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
7.காவலன் செயலியை பதிவிறக்குங்கள்
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்து காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ செயலியை அனைத்து பெண்களும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கோரிக்கை.
8.பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்
“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்” அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.
9.அதிமுக ஆட்சி! சட்டத்தின் ஆட்சி!
அதிமுக ஆட்சி இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை இருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
10.அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ஆய்வு
மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
டாபிக்ஸ்