TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Published Dec 20, 2024 10:12 AM IST

TOP 10 NEWS: வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, சப்தகிரி விரைவு ரயில் நிறுத்தம், மதுரையில் 24 மணி நேர விமான சேவை, புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு, ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!

2.6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

3.சப்தகிரி விரைவு ரயில் நிறுத்தம் 

திருவள்ளூர் லோகோ பைலட்டுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சப்தகிரி விரைவு ரயில் வழியில் நிறுத்தம். லோகோ பைலட் யுகேந்திரன் வயிற்று வலியால் துடித்த நிலையில், நேற்று இரவு திருவள்ளூரில் ரயிலை நிறுத்தினார். யுகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாற்று லோகோ பைலட் வைத்து ரயில் இயக்கப்பட்டது. 

4.ரயில் சேவைகள் பாதிப்பு 

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின் தடை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் எண்ணூர் ரயில் நிலையத்தில் புறநகர், விரைவு ரயில்கள் நிறுத்தம். 

5.மதுரையில் 24 மணி நேர விமானசேவை

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை இன்று (டிசம்பர் 20) முதல் தொடங்குகின்றது. முதற்கட்டமாக இரவு 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படுகின்றது. 

6.விசிகவினர் ரயில் மறியல் 

அம்பேத்கரை அவமதித்து அமித்ஷா பேசியதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரயில் நிலையத்தில் விசிகவினர் ரயில் மறியல் போராட்டம். மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

7.வைகை அணை நீர்மட்டம் 

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 2,136 கன அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையில் நீர் மட்டம் 64.30 அடியாகவும், நீர் இருப்பு 4,477 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. விநாடிக்கு 1,699 கன அடி நீர் வெளியேற்றம்.

8.ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு 

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு. பெண் வழக்கறிஞரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்த புகாரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9.மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3,004 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 111.02 அடியாகவும், நீர் இருப்பு 91.915 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாக உள்ளது.

10.புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு 

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பேருந்தின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்புக்கு பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. அதிகபட்ச கட்டண 13 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.