TOP 10 NEWS: ’புயல் எச்சரிக்கை தளர்வு! திமுக செயற்குழு! கேரளாவுக்கு செல்லும் மருத்துவ கழிவுகள்!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’புயல் எச்சரிக்கை தளர்வு! திமுக செயற்குழு! கேரளாவுக்கு செல்லும் மருத்துவ கழிவுகள்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’புயல் எச்சரிக்கை தளர்வு! திமுக செயற்குழு! கேரளாவுக்கு செல்லும் மருத்துவ கழிவுகள்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 22, 2024 09:41 AM IST

TOP 10 NEWS: புயல் எச்சரிக்கை தளர்வு, திமுக செயற்குழு கூட்டம், கேரளாவுக்கு எடுத்து செல்லப்படும் மருத்துவக் கழிவுகள், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ!

TOP 10 NEWS: ’புயல் எச்சரிக்கை தளர்வு! திமுக செயற்குழு! கேரளாவுக்கு செல்லும் மருத்துவ கழிவுகள்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’புயல் எச்சரிக்கை தளர்வு! திமுக செயற்குழு! கேரளாவுக்கு செல்லும் மருத்துவ கழிவுகள்!’ டாப் 10 நியூஸ்!

2.புயல் எச்சரிக்கை தளர்வு 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்கிட அறிவுறுத்தல். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

3.மெட்ரோ வேலைகளில் உள்வாங்கிய வீடு

சென்னை மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி கோடம்பாக்கம் - தியாகராய நகர் வழித்தடத்தில் நடந்து வரும் நிலையில், லாலா தோட்டம் 2ஆவது தெருவில் வீட்டின் தரைப்பகுதி திடீரென உள்வாங்கி பள்ளம் உண்டாகி உள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. 

4.ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி நோக்கி 57 பயணிகள் உடன் சென்ற ஆம்னி பேருந்து, வெங்கனூர் ஓடை பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. 

5.ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் 

புதுக்கோட்டையில் பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்ற போது கவிதா (27) என்ற கர்பிணி பெண் சுக பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவரம் பார்த்து தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் மற்றும் ஓட்டுநர் கண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. 

6.மீண்டும் கேரளாவுக்கு எடுத்து செல்லப்படும் மருத்துவ கழிவுகள்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்து செல்லப்பட உள்ளன. கழிவுகளை அகற்றும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கழிவுகளை கொண்டு வ்நது கொட்டிய லாரி உரிமையாளர் மற்றும் கேரளாவை சேர்ந்த தனியார் கழிவு மேலாண் நிறுவன சூப்பர் வைசர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

7.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,886 கன அடியாக சரிவு. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 119.22 அடியாக உயர்வு. நீர் இருப்பு 92.232 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

8.மத்திய சிறை உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்

மதுரை பைபாஸ் சாலைப் பகுதியில், முன்னாள் சிறைவாசி ஒருவர் நடத்தும் சாலையோர உணவகத்தில், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம். நேற்று காலை, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாலகுருசாமியை, அப்பெண் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

9.சுங்கச்சாவடிக்கு எதிராக பாமக போராட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாறு சுங்கச்சாவடியில், பாமக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநாட்டு வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் செல்ல 2 வழிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு வழியில் சென்ற போது ஃபாஸ்டேக் மூலம் பணம் பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு.

10.குப்பை தொட்டியில் புகுந்த முதலையால் பரபரப்பு 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே வட்டத்தூர் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் நேற்றிரவு முதலை ஒன்று புகுந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் விரைந்து வந்து சுமார் 5 அடி நீளமுள்ள முதலையை பிடித்தனர்.சிதம்பரம் அருகே உள்ள வாள்காரமேடு ஏரியில் முதலை விடப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.