TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Nov 30, 2024 07:42 PM IST

TOP 10 NEWS: கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னையில் மழை, மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு, தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம், சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!

2.செம்பரம்பாக்கம் ஏரி எப்படி உள்ளது?

செம்பரம்பாக்கம் ஏரி மதகு பகுதிகளில் காஞ்சிரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். “செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இருப்பினும் பாதுகாப்பாக உள்ளது” என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பேட்டி. 

3.மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

சென்னை வேளவ்சேரி விஜயநகர் 2ஆவது மெயின் ரோடு சந்திப்பில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கிய சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு. 

4.மின்சார கட்டணம் செலுத்த அவகாசம்!

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஜ்ன்சிபுரத்தில் மின்சார கட்டணம் செலுத்த டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு. 

5.சென்னை விமான நிலையம் மூடல் 

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. 

6.சென்னையில் உதயநிதி ஆய்வு 

சென்னையில் இன்று காலை முதல் 110 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றது. இவ்வளவு மழை பெய்தாலும், பாதிப்புகள் குறைவாகவே உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 

7.வங்கித் தேர்வுகள் ஒத்திவைப்பு 

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

8.நாளை மருத்துவ முகாம்கள் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

9.சென்னை முகாம்களில் உணவு விநியோகம்

சென்னையில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் 2.23 லட்சம் மக்களுக்கு இன்று காலை முதல் உணவு வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

10.தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கண்டனம். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.