TOP 10 NEWS: ஈரோடு கிழக்கில் யார் போட்டி?, மீண்டும் கூடும் பேரவை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி, ஜனவரி 6ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக உத்தரவு, நெல்லையில் ஒருவர் வெட்டிக் கொலை, ஈபிஎஸ் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.ஈரோடு கிழக்கில் இந்தியா கூட்டணி வெல்லும்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வசமாமும். தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பேட்டி.
2.ஜன.6இல் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
3.ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்
“கடந்த ஆண்டு, முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்தார். இந்த முறையாவது அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்” என சபாநாயகர் பேட்டி.
4.இரட்டை இலை சின்னம் தொடர்பாக உத்தரவு
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. 8 வார கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சூரிய மூர்த்தி என்பவர் தொடர்ந்து மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
5.நெல்லை நீதிமன்ற வாயிலில் வெட்டிக் கொலை
நெல்லை நீதிமன்ற வாயிலில் மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் கவுன்சிலர் கொலை வழக்கில் மாயாண்டி முக்கிய குற்றவாளியாக இருந்தார்.
6.ஈபிஎஸ் மீது முதலமைச்சர் விமர்சனம்
எங்களை பார்த்து கத்திப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசை கீச்சுக் குரலில் கூட கண்டிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
7.பொங்கலை குறி வைப்பது ஏன்?- சு.வெ.ட்வீட்
ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?, ‘யுஜிசி - நெட்’ தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வருகின்றது. தேர்வு தேதியை மாற்றக் கோரி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதி உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்வீட்.
8.தங்கம் விலை குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தில் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9.தீட்சிதர்கள் தரப்புக்கு 2 வார கால அவகாசம்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் சட்ட விரோதமாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் செளந்தர் அமர்வு, கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர். அறநிலையத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதால், பத்திரப்பதிவுத்துறையிடம் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் அனுமதி. கோயிலின் வரவு - செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு 2 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
10.பழனி கோயில் தங்கம் முதலீடு
பழனி திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத 136 கோடி மதிப்பிலான 193 கிலோ பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி, தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் SBI வங்கியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
டாபிக்ஸ்