TOP 10 NEWS: ‘போலீசை சாடும் சவுக்கு சங்கர் முதல் எஸ்.வி.சேகரை புகழும் முதல்வர் வரை!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ‘போலீசை சாடும் சவுக்கு சங்கர் முதல் எஸ்.வி.சேகரை புகழும் முதல்வர் வரை!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ‘போலீசை சாடும் சவுக்கு சங்கர் முதல் எஸ்.வி.சேகரை புகழும் முதல்வர் வரை!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Jan 21, 2025 09:52 AM IST

TOP 10 NEWS: சிவகங்கையில் முதலமைச்சர் ஆய்வு, தமிழக காவல்துறையை சாடிய சவுக்கு சங்கர், விஜய்க்கு அண்ணாமலை கேள்வி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ‘போலீசை சாடும் சவுக்கு சங்கர் முதல் எஸ்.வி.சேகரை புகழும் முதல்வர் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ‘போலீசை சாடும் சவுக்கு சங்கர் முதல் எஸ்.வி.சேகரை புகழும் முதல்வர் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

2.காவல்துறை ஒடுக்குகிறது - சவுக்கு சங்கர்!

திமுக அரசை எதிர்த்தே பேசக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் வாய் மூடி மவுனியாக்கப்பட்டுவிட்டதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் யுட்யூப்களில் எழும் குரல்கள் கூட திராவிட மாடல் அரசால் காவல்துறையை வைத்து ஒடுக்கப்பட்டு வருகின்றன என சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர் கருத்து. 

3.ஈரோடு கிழக்கில் 46 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் போட்ட்யிடுகின்றனர். 

4.செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்று இருந்தார். 

5.நெல்லின் ஈரப்பதம் குறித்து கடிதம்!

தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது. 

6.எஸ்.வி.சேகருக்கு முதல்வர் புகழாரம்!

எதை பற்றியும் கவலைப்படாமல் தான் இருக்கும் கட்சியில் இருப்பவர்களையே துணிச்சல் உடன் விமர்சிக்கும் ஆற்றல் கொண்டவர் எஸ்.வி.சேகர். இதை பார்க்கும் போது 2026 தேர்தலில் இவரை பயன்படுத்திக் கொண்டாலே போதும் எனத் தோன்றுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

7.விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், “விஜய் ஆக்கபூர்வமான யோசனை கொடுக்கவேண்டும். வேறு இடங்கள் ஏதும் வாய்ப்புள்ளதா என்று விஜய் சொல்லவேண்டும்” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

8. கோமிய சர்ச்சை குறித்து முன்னாள் அமைச்சர் கேள்வி

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில் மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளதாக உறுதிப்பட கூறி உள்ளது. இந்த ஆய்வு முடிவை ஐஐடி இயக்குநர் காமகோடி மறுக்கிறாரா? என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி.

9.மெட்ரோவில் உணவு சாப்பிட தடை 

சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை; சுமுகமான, இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பின்பற்றவும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள். 

10.காவல் நிலையம் முன் தீக்குளிப்பு. 

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிப்பு. 

 

 

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.