TOP 10 NEWS: ஸ்டாலினை விளாசும் கம்யூனிஸ்ட் கட்சி! தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல்! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ஸ்டாலினை விளாசும் கம்யூனிஸ்ட் கட்சி! தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல்! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ஸ்டாலினை விளாசும் கம்யூனிஸ்ட் கட்சி! தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல்! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Jan 04, 2025 09:56 AM IST

TOP 10 NEWS: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல், முதலமைச்சர் ஸ்டாலின் மீது கே.பாலகிருஷ்ணன் விமர்சனம், சிதம்பரம் கோயிலில் கொடியேற்றம், கேஸ் டேங்கர் லாரி டிரைவர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ஸ்டாலினை விளாசும் கம்யூனிஸ்ட் கட்சி! தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல்! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ஸ்டாலினை விளாசும் கம்யூனிஸ்ட் கட்சி! தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல்! டாப் 10 நியூஸ்!

1.சிதம்பரம் கோயிலில் கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். வரும் 12ம் தேதி தேரோட்டமும், மறுநாள் மதியம் ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

2.ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே சமைத்து உண்ணும் விநோத திருவிழா நடைபெற்றது. 57 கிடாய்கள் வெட்டி, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்ண ஏற்பாடு.  

3.தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல் 

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், அனுமதி இல்லாமல் சிலர் மேடையில் ஏறியதால் மோதல் ஏற்பட்டது. 

4.கேஸ் டேங்கர் லாரி டிரைவர் கைது

கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஒட்டுநர் ராதகிருஷ்ணனை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவை மத்திய சிறையில் அடைப்பு.

5.பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

விக்கிரவாண்டியிலுள்ள தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் LKG குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது. 

6.போலி வழக்கறிஞர் கைது

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திர்ந்த போலி வழக்கறிஞர் வினோத்குமார் கைது. அவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை. 

7.தனியார் பள்ளிகள் சங்க கூட்டம் 

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும், ஜனவரி 10ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி, குறைகளை களைய நடவடிக்கை எடுக்க திட்டம்.

8. 3 மாத பெண் குழந்தை மீட்பு 

சென்னை பெரம்பூரில் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு உள்ளது. குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் குழந்தையை பத்திரமாக மீட்டு பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

9. முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்?  என சிபிஎம் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி.

10.சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் 

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை செண்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம். ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.