TOP 10 NEWS: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து முதல் வெம்பக்கோட்டையில் பீங்கான் கண்டெடுப்பு வரை! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து முதல் வெம்பக்கோட்டையில் பீங்கான் கண்டெடுப்பு வரை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து முதல் வெம்பக்கோட்டையில் பீங்கான் கண்டெடுப்பு வரை! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 25, 2024 09:42 AM IST

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், வெம்பக்கோட்டையில் பீகான் கண்டெடுப்பு, வாய்பாய்க்கு அண்ணாமலை புகழாரம், உணவுத்திருவிழாவில் 1.50 கோடிக்கு உணவு விற்பனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து முதல் வெம்பக்கோட்டையில் பீங்கான் கண்டெடுப்பு வரை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து முதல் வெம்பக்கோட்டையில் பீங்கான் கண்டெடுப்பு வரை! டாப் 10 நியூஸ்!

2.வெம்பக்கோட்டையில் பீங்கான் பொருட்கள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் பீங்கானால் செய்யப்பட்ட உருண்டை வடிவ மணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2850க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 

3.வாஜ்பாய்க்கு அண்ணாமலை புகழாரம்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு தினத்தில் அவர் புகழை போற்றி வணங்குகிறோம். இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாடுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். சமத்துவம், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம்.

4.பெரம்பூரில் ஒருவர் கொலை

சென்னை பெரம்பூரில் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொல்லை செய்த மணிகண்டன் என்பவர் இரும்புராடால் அடித்துக் கொலை.கொலை தொடர்பாக ஜெய்சங்கர், ஐசக் ஜெயக்குமார் ஆகியோரிடம் நடந்த விசாரணையில், பணம் தரவில்லை என்றால் உன் மகனைக் கொன்றுவிடுவேன் என ஜெயங்கரின் தந்தையிடம் கூறியதால் மணிகண்டனை கொன்றதாக கூறி உள்ளார். 

5.உணவுத்திருவிழா! 1.50 கோடிக்கு விற்பனை!

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவினரின் 1.50 கோடி மதிப்பிலான தயாரிப்பு பொருட்கள், உணவுகளை வாங்கி சென்றனர். 

6.விஜய் கிறிஸ்துமஸ் பண்டிக்கை வாழ்த்து 

இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து இருக்கட்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து. 

7.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,960 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் மட்டம் 119.46 அடியாகவும், நீர் இருப்பு 92.613 டி.எம்.சி.யாகவும் உள்ளது. விநாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றம்.

8.சென்னையில் பைக்குகள் பறிமுதல் 

சென்னை திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞர்களிடம் இருந்து 33 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை. 

9.டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேறு இடத்தில் ஆய்வு

கடும் எதிர்ப்பை தொடர்ந்து மதுரை அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் கனிம சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மீதமுள்ள பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

10.சமயபுரத்தில் 71.82 லட்சம் காணிக்கை

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில், 13 நாட்களில் ரூ.71.82 லட்சம் உண்டியல் காணிக்கைகள் செலுத்தப்பட்டு உள்ளன. 1.39 கிலோ தங்கம், 2.71 கிலோ வெள்ளி, 532 வெளிநாட்டு கரன்சிகள், நாணயங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளன. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.