Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. மநீம தலைவரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. டாப் 10 நியூஸ்!
Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள், தவெகவின் வீட்டிற்கு ஒரு வாக்கு உறுதி திட்டம் குறித்து பதிலளித்த ஜெயக்குமார், பச்சை பட்டாணியை இறக்குமதி செய்த விவகாரத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது என இன்றைய டாப் 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் முதல் உளுந்தூர்பேட்டை அருகே ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு வரை தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைப்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு குறித்து இதில் பார்க்கலாம்.
1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் சென்னையில் பிப்ரவரி 24ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்வர் மருந்தகங்களில் குறைந்தவிலைக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.
பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!
விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி சத்தியபிரபு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே இரு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி 35 என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும் அவரது சகோதரி கஸ்தூரி 33, உள்ளிட்ட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
