TOP 10 NEWS: ’போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Jan 13, 2025 06:42 AM IST

TOP 10 NEWS: போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!’ டாப் 10 நியூஸ்!

2.சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!

பொங்கல் பண்டிகை நாளை தொடங்கும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை புறநகர் சாலைகளில் 3வது நாளாக பயணிகள் கூட்டம் அலை மோதியது. 

3.ஜல்லிக்கட்டு போட்டி! போலீஸ் எச்சரிக்கை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலி டோக்கன்களை பயன்படுத்தி வாடிவாசலுக்கு நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.

4.இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும் அறிவிப்பு. மூத்த தலைவர்கள் உடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அண்ணாமலை அறிக்கை. 

5.பொங்கல் பரிசில் குளறுபடி!

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி என புகார். விலையில்லா வேட்டி,சேலைகளின் இருப்பு குறைவாக இருப்பதாக தகவல்.

6.முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்

இந்திய அரசமைப்பை ஏற்றுக் கொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம். 

7.ஆளுநர் மீது உதயநிதி விமர்சனம்!

ஆளுநர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது, சட்டமன்றத்திற்குள் நடைபயிற்சி மேற்கொண்டவர் ஆளுநர் என துணை முதலமைச்சர் ஆர்.என்.ரவி விமர்சனம். 

8.சென்னை புத்தக கண்காட்சி நிறைவு!

48வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது. 20 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல். 

9.கிரீமிலேயர் முறைக்கு ராமதாஸ் வரவேற்பு!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை. 

10.குப்பை எரி உலைக்கு அன்புமணி எதிர்ப்பு!

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.