TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை பலி! தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை பலி! தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை பலி! தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 12, 2024 10:29 AM IST

TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை பலி, கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரையாண்டு மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு, சாத்தனூர் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை, வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை பலி! தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை பலி! தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! டாப் 10 நியூஸ்!

2.நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 

3.சாத்தனூர் அணையில் இருந்து நீர்த்திறப்பு 

தொடர் கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. சாத்தணூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

4.உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வரும் டிசம்பர் 14ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

5.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

6.அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு 

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

7.திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகளுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

8.சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

நாகை மாவட்டம் செம்பியம் மகாதேவி பகுதியில் கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9ஆம் வகுப்பு மாணவன் கவியழகன் உயிரிழந்தார். சிறுவைன் தங்கை, தந்தை ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

9.வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

தொடர் மழை காரணமாக சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 80 சதவீதம் நிரம்பி உள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.18 அடியை எட்டியது. நீர்வரத்து 713 கன அடியாக அதிகரித்த நிலையில், நீர் இருப்பு 2,903 மில்லியன் கன அடியாக உள்ளது. 

10.தொடர் மழையால் விமானம் தாமதம் 

சென்னையில் தொடர் கனமழை காரணமாக 14 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளத். சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் புறப்பாடு, 5 விமானங்களின் வருகை தாமதம் ஆகி உள்ளது. பன்னாட்டு விமான நிலையத்தில் 2 விமானங்கள் தாமதம் ஆகி உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.