Top 10 News: ஆட்டோ கட்டணம் உயர்வு முதல் திமுக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை வரை - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ஆட்டோ கட்டணம் உயர்வு முதல் திமுக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை வரை - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!

Top 10 News: ஆட்டோ கட்டணம் உயர்வு முதல் திமுக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை வரை - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 29, 2025 09:55 AM IST

Top 10 News 29.01.2025: தமிழ்நாடு அரசியல் நிலவரம், ஈரோடு இடைத்தேர்தல், ஆட்டோ கட்டணம் உயர்வு, திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ..!

Top 10 News: ஆட்டோ கட்டணம் உயர்வு முதல் திமுக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை வரை - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!
Top 10 News: ஆட்டோ கட்டணம் உயர்வு முதல் திமுக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை வரை - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!

ஆட்டோ கட்டணம் உயர்வு

வரும் பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு போட்ட முக்கியமான பதிவு!

கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் ‘மருங்கூர் அகழாய்வு’ என்பது உறுதியாகியுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு

தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பனையூரில் நடக்கும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் 2 ஆவது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பணியில் இருந்த சிறை காவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவிட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஏசுதாஸ் கடந்த 27ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 மாணவர்கள் போக்சோவில் கைது

ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 அரசுப்பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள கூராய்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் பிப்.4-ம் தேதி அதிமுக கள ஆய்வு

சென்னை மாவட்​டத்​தில் கட்சி அமைப்பு​ ரீ​தியாக கள ஆய்வு பிப்​.4-ல் நடைபெறும் என்று அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி அறிவித்​துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

"ஈரோடு இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, பாஜகவினர் பேசுவது போல நாமும் பேசினால் பாஜக ஆதரவாளர்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போட்டு பெரியாரை பற்றி சிலர் அவதூறு பேசுகிறார்கள்” - விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

“திருப்பரங்குன்றம் மலைக்கோவில் விவகாரத்தில் முருகன், அல்லா இருவரும் காப்பாற்றப்படுவார்கள்” என்று அம்பத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.