TOP 10 NEWS: ’ராமதாஸை சந்திக்கும் அன்புமணி! நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’ராமதாஸை சந்திக்கும் அன்புமணி! நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’ராமதாஸை சந்திக்கும் அன்புமணி! நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 29, 2024 09:38 AM IST

TOP 10 NEWS: ராமதாஸை சந்திக்கும் அன்புமணி, நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா, பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’ராமதாஸை சந்திக்கும் அன்புமணி! நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’ராமதாஸை சந்திக்கும் அன்புமணி! நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா!’ டாப் 10 நியூஸ்!

2.நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகின்றது. பழ.நெடுமாறன் ஒருங்கிணைக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 

3.அமைச்சர் சேகர்பாபு பேட்டி 

"திருக்கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்கள் கூட, தற்போது பாராட்டி வருகின்றனர்” என அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

4.குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் 

சபரிமலை சீசன் மற்றும் அரையாண்டு விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அம்மன் கோயில் கிழக்கு வாசல், சன்ரைஸ் பாயின்ட், முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சூரிய உதயத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

5.அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்

2001ம் ஆண்டு மேல்மலையனூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மொழி இராஜதத்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழப்பு.

6.திருச்செந்தூரில் டைடல் பார்க் திறப்பு 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே நியோ டைடல் பூங்காவை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

7.கடலில் குளிக்க தடை விதிப்பு 

புத்தாண்டையொட்டி டிச.31ஆம் தேதி மாலை முதல் ஜன.1ஆம் தேதி வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடற்கரைகளில் தடுப்புகள் அமைத்து, தொடர் வாகன கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல். 

8.பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு 

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி,சேலை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. 

9.பிரதமரை சந்தித்த குகேஷ்

உலக செஸ் சாம்பியன் குகேஷ் தனது பெற்றோர் உடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

10.அமைச்சர் ரகுபதி பேட்டி 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்; காவல்துறை காரணம் இல்லை.அண்ணா பல்கலை. விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.