தலைப்பு செய்திகள்: அமித்ஷா வருகை முதல் ராமதாஸ் பேட்டி வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: அமித்ஷா வருகை முதல் ராமதாஸ் பேட்டி வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: அமித்ஷா வருகை முதல் ராமதாஸ் பேட்டி வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published Jun 08, 2025 10:27 AM IST

உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னை, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: அமித்ஷா வருகை முதல் ராமதாஸ் பேட்டி வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: அமித்ஷா வருகை முதல் ராமதாஸ் பேட்டி வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

1.அமித்ஷா மதுரை வருகை

உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு இரண்டு நாள் பயணமாக வந்தடைந்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மதுரை விமான நிலையத்தில் பாஜக மற்றும் ஆதிமுகவினரால் உற்சாக வரவேற்பு. இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

2.ராமதாஸ் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இல்லை எனவும், பாஜகவுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

3.எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இல்லாமல் திறந்ததால் மக்கள் பாதிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. திமுக அரசின் நிர்வாக திறனின்மைக்கு இது சாட்சியம் எனவும் விமர்சனம்.

4.நெல், அரிசி சேதம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் 840 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மற்றும் அரிசி சேதமடைந்ததற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

5.மதுரை-தூத்துக்குடி சுங்கச்சாவடி

இரு சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. திங்கள்கிழமை விசாரணை.

6.விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றத்தின்போது பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து விஷவாயு தாக்கி தொழிலாளி மணி உயிரிழப்பு.  

7.சிறுவனை குதறிய வெறிநாய்

ஓசூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது. பலத்த காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை. 

8.முருகன் சிலைக்கு குடமுழுக்கு

வேலூர் மாவட்டம் புதுவசூர், தீர்த்தகிரி மலை மீது உள்ள 92 அடி உயரம் உள்ள உலகின் 3ஆவது முருகனின் மிக உயரமான சிலைக்கு குடமுழுக்கு நடைபெற்றது. 

9.வீட்டில் கருக்கலைப்பு - 2பேர் கைது

சேலம் மாவட்டம் தலைவாசலில் கர்பிணிகளுக்கு ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை கண்டறித்து, கருக்கலைப்பு செய்து வந்த மணிவண்ணன் மற்றும் பிரசாத் ஆகியோர் கைது. 

10.உலக அளவில் முருகன் மாநாடு 

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவோம் என செல்வப்பெருந்தகைக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி.