TOP 10 NEWS: ’சென்னை வரும் அமித்ஷா! ஈசிஆர் சாலையில் பெண்களை அச்சுறுத்தியவர்கள் கைது!’டாப் 10 நியூஸ்
TOP 10 NEWS: சென்னை வரும் அமித்ஷா, ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம், காலை உணவுத்திட்டத்தை மாநகராட்சியே அறிவிக்கும், அண்ணா நினைவுநாள் பேரணி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சென்னையில் போக்குவரத்து மாற்றம்
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் சென்னை வருவதை முன்னிட்டு சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் - ஈ.சி.ஆர் சாலையில் பயணிக்க பழைய மகாபலிபுரம் சாலையை பயன்படுத்தலாம் என அறிவிப்பு.
2.பெண்களை அச்சுறுத்தியவர்கள் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்தி சென்று அச்சுறுத்திய சம்பவத்தில் ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3.காலை உணவுத்திட்டத்தை மாநகராட்சியே மேற்கொள்ளும்!
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை சென்னை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும். வெளி நிறுவனங்கள் மூலம் காலை உணவு சமைத்து பள்ளிகளில் வழங்க கோரிய ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மேயர் பிரியா அறிவிப்பு.
4.அண்ணாநினைவுநாள் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுநாளையொட்டி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெறும் என அறிவிப்பு.
5.போலி கற்களை விற்க முயன்றவர்கள் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நாகமாணிக்க கற்களை ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
6.சீமான் யாரின் ஜெராக்ஸ் காப்பி
சீமானின் பேச்சை அண்ணாமலையும், தமிழிசையும் வரவேற்கிறார்கள் என்றால் யாருடைய ஜெராக்ஸ் காப்பி சீமான் என்பது புரிகிறது என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு.
7.ஏசி வெடித்து ஒருவர் உயிரிழப்பு
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள வீட்டில் ஏசி வெடித்ததில் பேராசிரியர் தனலட்சுமி என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
8.ஆமைகளை கடத்தியவர்கள் கைது
பாங்க்காக்கில் இருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த சாவித்ரி, உஷா ஆகிய பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
9.அதிமுக பிரமுகருக்கு ஜாமீன்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
10.லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. கைது
குற்ற வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ள புகார்தாரரிடம் ரூ.70,000 லஞ்சம் கேட்டு, முதற்கட்டமாக ரூ.30,000 வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்.ஐ., சண்முகநாதன் கைது. புதுர் பேருந்து நிலையம் அருகே ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகநாதன் லஞ்சமாக வாங்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
