TOP 10 NEWS: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Jan 07, 2025 09:43 AM IST

TOP 10 NEWS: சட்டப்பேரவையில் 'யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை, ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர், ஆளுநர் மீது சீமான் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!

1.சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளது. 

2.ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்

ஆளுநரை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. “தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர்; அவரை காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. 

3.கருப்பு நிறத்தை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்

"கருப்பு நிறத்தை பார்த்தாலே ஸ்டாலின் பயப்படுகிறார். திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா?" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். 

4.ஆளுநர் தமிழ்நாட்டைவிட்டே போயிருக்கலாம்

ஆளுநர் சட்டசபையை விட்டு போனதற்கு பதில், தமிழ்நாட்டை விட்டே போயிருக்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். 

5.மருத்துவ இடங்களை அதிகரிக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் 500 எம்.பி.பி.எஸ், 88 முதுநிலை இடங்களை அதிகரிக்க கோரி மருத்துவ கல்வி இயக்ககம், தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளது. 

6.தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ஜனவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. 

7.ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு செய்ய இன்றே கடைசி

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு.

8.மிதவை உணவகம் இன்று திறப்பு 

சென்னையை அடுத்த முட்டுக்காடு ஏரியில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மிதவை படகு உணவகத்தை இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் தொடங்கி வைக்கிறார். 

9.முதலிடத்தில் தமிழ்நாடு 

தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல், அதிக உற்பத்தி செய்தலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

10.யார் அந்த சார்?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாளான இன்று ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் உடன் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். 

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.