TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் ஈபிஎஸ்! ஈவிகேஎஸ்க்கு அரசு மரியாதை!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அதிமுக பொதுக்குழு கூட்டம், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை, கஞ்சா விற்பனை குறித்து ராமதாஸ் வேதனை, மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் ஈபிஎஸ்! ஈவிகேஎஸ்க்கு அரசு மரியாதை!’ டாப் 10 நியூஸ்!
பிற்பகல் வரை தமிழ்நாட்டில் நடந்த டாப் 10 செய்திகளின் விவரம் இதோ:-
1.கொள்கைதான் நிலையானது
கூட்டணி வரும் போகும்; ஆனால் கொள்கை நிலையானது; தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுகதான். 2021ஆம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியில் அமர்ந்ததாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
2.ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை
மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொது வாழ்வை போற்றும் விதமாக அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
3.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
இன்று முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளின் மிதமான மழையும் டிசம்பர் 18ஆம் தேதி அன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
