Top 10 News: கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி, ‘கம்பேக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி’: முதல்வர் ஸ்டாலின்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி, ‘கம்பேக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி’: முதல்வர் ஸ்டாலின்

Top 10 News: கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி, ‘கம்பேக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி’: முதல்வர் ஸ்டாலின்

Manigandan K T HT Tamil
Nov 06, 2024 01:11 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழ்நாடு சமையல் தொழிலாளர் கலை முன்னேற்ற சங்கம், அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி செய்து அசத்தினர்.

Top 10 News: கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி, ‘கம்பேக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி’: முதல்வர் ஸ்டாலின்
Top 10 News: கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி, ‘கம்பேக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி’: முதல்வர் ஸ்டாலின்
  •  “திருவண்ணாமலை அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் குடும்ப காரணங்களால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 51 பழங்குடியின மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்த்தார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். குழந்தைகளின் பள்ளிப் படிப்பை நிறுத்த முயற்சிக்கும் பெற்றோர்களின் மீது| சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
  •   அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழ்நாடு சமையல் தொழிலாளர் கலை முன்னேற்ற சங்கம், அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி செய்து அசத்தினர். அவருக்கு இட்லி, சாம்பார் பிடிக்கும் என கூறியதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ள நிர்வாகிகள், கமலா ஹாரிஸ் அதிபரானால் பட்டாசு வெடித்து கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எல்இடி லைட்டை விழுங்கிய குழந்தை

  •  LED லைட்டை விழுங்கிய குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள். திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த LED லைட்டை பாதுகாப்பாக அகற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள். பிராங்கோஸ்கோப்பி என்ற நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ள இந்த LED லைட் ரிமோட் கன்ட்ரோல் காருடையது என தெரிய வந்துள்ளது.
  •  அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி முன் அனுமதி பெறுவது அவசியம் -நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி.மாசி அமர்வு தீர்ப்பளித்தது.
  •  விழுப்புரத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நுற்றாண்டு நூலகத்தினை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

TAMILNADU TOP 10: விஜய்யால் முக்கிய முடிவெடுக்க உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் சிக்கலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் வரை

  • அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
  •  “கடந்த சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக செல்வாக்கு அதிகமாகியுள்ளது. இதுதான் பலரும் நம்மை விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருவோம்” -கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் ஆய்வு

  •  கோவை சிறை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  •  "ரூ.600 கோடியில் உயர்மட்ட மேம்பாலச்சாலை" கோவை சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை ரூ.600 கோடியில் உயர்மட்ட மேம்பாலச்சாலை நீட்டிக்கப்படும். உப்பிலிப்பாளையம்-சின்னியம்பாளையம் வரையிலான மேம்பாலம் அமைக்கும் பணி மேலும் 5 கி.மீ.க்கு நீட்டிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.