TOP 10 NEWS: ’மதுரையில் 144 தடை உத்தரவு முதல் ஈரோட்டில் பரப்புரை ஓய்வு வரை!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’மதுரையில் 144 தடை உத்தரவு முதல் ஈரோட்டில் பரப்புரை ஓய்வு வரை!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’மதுரையில் 144 தடை உத்தரவு முதல் ஈரோட்டில் பரப்புரை ஓய்வு வரை!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Feb 03, 2025 09:57 AM IST

மதுரையில் 144 தடை உத்தரவு, ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு, அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’மதுரையில் 144 தடை உத்தரவு முதல் ஈரோட்டில் பரப்புரை ஓய்வு வரை!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’மதுரையில் 144 தடை உத்தரவு முதல் ஈரோட்டில் பரப்புரை ஓய்வு வரை!’ டாப் 10 நியூஸ்!

1.மதுரையில் 144 தடை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு அறிவித்து உள்ள போராட்டம் காரணமாக மதுரையில் இன்று காலை முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிறப்பித்து உள்ளார்.

2.இல்லம் தேடி கல்விக்கு பாராட்டு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருதாளாத ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. 

3.அண்ணா நினைவிடத்தில் மரியாதை 

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் பேரணியாக வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செய்தனர். 

4.ஈரோட்டில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவைகிறது. தொகுதியை சாராத வெளியூர்காரர்கள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவு. 

5.சாரண இயக்கத்திற்கு புதிய அலுவலகம் 

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் 10 கோடி ரூபாயில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

6.இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது 

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 

7.ராமர் சாமியும் வேண்டாம்! ராமசாமியும் வேண்டாம்!

எங்களுக்கு ராமர் சாமியும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம் என ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

8.சிபிஐ விசாரணை கேட்கும் ஈபிஎஸ் 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் அரசின் தலையீடு அற்ற முறையான சிபிஐ விசாரணை தேவை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து. 

9.பத்திரிகையாளர்கள் செல்போன் பறிப்பிற்கு கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்கள் செல்போன்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?, முதல் தகவல் அறிக்கை லீக் ஆனது முழுக்க முழுக்க அரசின் தவறு என ஈபிஎஸ் கருத்து. 

10.ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் பழமையான 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.