தலைப்பு செய்திகள்: ‘10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!’ முக்கிய செய்திகளின் தொகுப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: ‘10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!’ முக்கிய செய்திகளின் தொகுப்பு!

தலைப்பு செய்திகள்: ‘10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!’ முக்கிய செய்திகளின் தொகுப்பு!

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 10:09 AM IST

”10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, அமலாக்கத்துறை ரெய்டு, தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!”

தலைப்பு செய்திகள்: ‘10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!’ முக்கிய செய்திகளின் தொகுப்பு!
தலைப்பு செய்திகள்: ‘10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!’ முக்கிய செய்திகளின் தொகுப்பு!

1.10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி. மாணவர்களை விட மாணவியர்கள் கூடுதலாக 4.14 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.

2.11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

இன்று பிற்பகல் 2 மணி அளவில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை www.tnresults.inc.in மற்றும் www.results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 

3.அமலாக்கத்துறை ரெய்டு 

சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை. 

4.2036 வரை திமுக ஆட்சிதான் 

2026 மட்டுமல்ல, 2031 மற்றும் 2036ஆம் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

5.7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

6.தங்கம் விலை குறைய வாய்ப்பு 

அடுத்த 2 வாரங்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர். 

7.ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் தலைமறைவு

பொள்ளாச்சியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, கொடூரமாக தாக்கிய ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் அருண் குமார் மீது போஸ்கோ வழக்கு பாய்ந்தது. தலைமறைவாக உள்ள அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 

8.அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல். மோப்பநாய் உதவியுடன் போலீசார் நேற்று இரவு நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை மொத்தம் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9.மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு 

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 3306 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.18 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 75.849 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம்.

10.தங்கம் விலை உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து 69 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆகிறது.